தமிழ்நாடு
கூடங்குளம் அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடக்கம்
கூடங்குளம் அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடக்கம்
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் இன்று முதல் வர்த்தக ரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கியது.
முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஏப்ரல் 13ஆம் தேதி மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்த பணிகள் முடிந்து, அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 24ஆம் தேதி அணுக்கரு பிளவு சோதனைக்கு அனுமதி வழங்கியது. 5நாட்கள் சோதனைக்கு பின் இன்று காலை 6. 37 மணிக்கு மீண்டும் வர்த்தக ரீதியான மின்னுற்பத்தி தொடங்கியது. முதற்கட்டமாக 100 மெகா வாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. 2ஆவது அணு உலையில் கடந்த 4ஆம் தேதி வால்வு பழுது காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது.