தி.நகரில் போக்குவரத்து மாற்றம்: ஓராண்டு இந்த ரூட்-க்கு தடை! புதிய மாற்று வழித்தடங்கள் என்ன?

தி.நகர் போக்குவரத்து மாற்றம்: புதிய வழித்தடங்கள் அறிமுகம்
Road overpass
Road overpassPT

செய்தியாளர் ரமேஷ்

சென்னை தி.நகர் பகுதியில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்...! ஏன்? என்ன மாற்றம்?

சென்னை தியாகராய நகரில் சாலை மேம்பாலம் கட்டும் பணிக்காக இன்று காலை 10 மணிமுதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக, “சென்னை தியாகராய நகரில் சாலை மேம்பாலம் கட்டும் பணிக்காக இன்று காலை 10 மணிமுதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது” என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முழு அறிவிப்பில், “மேட்லி சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கவுள்ளதால் 27.4.2024 முதல் 26.4.2025 வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.”

Road overpass
சிகிச்சை பார்ப்பது போல வந்து வெறிச்செயல்.. சென்னையில் உறைய வைத்த இரட்டை கொலை.. சிக்கிய செல்போன்!

ஆகவே, வடக்கு உஸ்மான சாலையிலிருந்து உஸ்மான் சாலை மேம்பாலம் வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, பேருந்துகள், மேம்பாலம் அணுகு சாலை வழியாக பிரகாசம், பாஷ்யம், பர்கிட் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

மற்ற வாகங்கள் மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com