சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே திடீரென தீப்பற்றி எரிந்த நட்சத்திர விடுதி!

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே திடீரென தீப்பற்றி எரிந்த நட்சத்திர விடுதி!
சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே திடீரென தீப்பற்றி எரிந்த நட்சத்திர விடுதி!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை எதிரில் ஜோசப் ஸ்டாலின் என்பவருக்கு சொந்தமான நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று பகல் இந்த நட்சத்திர விடுதியின் 207 ஆம் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீ மள மளவென அறை முழுவதும் பரவியது.

இதையடுத்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, எழும்பூர் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள், ஐந்து வாகனங்களில் சென்று ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அறையில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் விசாரணை தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்து குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com