\
விளம்பி பழத்திற்கு அமோக வரவேற்பு

விளம்பி பழத்திற்கு அமோக வரவேற்பு

விளம்பி பழத்திற்கு அமோக வரவேற்பு
Published on

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஸ்டார் ஃப்ரூட் என்றழைக்கப்படும் விளிம்பி பழத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கொடைக்கானல் கீழ்மலைக் கிராமமான கும்பரையூரைச் சுற்றிலும் ஸ்டார் பழம் அதிகமான அளவில் பயிரிடப்பட்டிருக்கிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் இந்தப் பழம் அதிக விளைச்சலைத் தருகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். 
ஒரு கிலோ விளிம்பி பழத்தினை 40 ரூபாய் வரையில் வெளிமாநில வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இந்த மரத்திற்கு பராமரிப்பு தேவையில்லை என்பதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com