தமிழக தேர்தல் முடிவுகள் 2021 - பின்னடைவைச் சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

தமிழக தேர்தல் முடிவுகள் 2021 - பின்னடைவைச் சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!
தமிழக தேர்தல் முடிவுகள் 2021 - பின்னடைவைச் சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நட்சத்திர வேட்பாளர்களாகவும், கட்சியின் முக்கிய வேட்பாளர்களாக இருந்த பலரும், இன்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

பிற்பகல் நிலவரப்படி, காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி. ராமு முன்னிலையில் உள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் முன்னிலையில் உள்ளார்.

கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார்.

பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் முன்னிலையில் உள்ளார்.

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி முன்னிலையில் உள்ளார்.

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளாராக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார் பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மூர்த்தி முன்னிலையில் உள்ளார்.

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளாராக போட்டியிட்ட அமைச்சர் ராஜலெட்சுமி பின்தங்கியுள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ஈ.ராஜா முன்னிலையில் உள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பின்தங்கியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com