மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி காலமானார்

மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி காலமானார்

மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி காலமானார்
Published on

சமூகர் ஆர்வலரும் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்தவருமான ஸ்டான் சுவாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

திருச்சியைச் சேர்ந்த ஸ்டான் சுவாமி ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தார். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டதாகக்கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஸ்டான் சுவாமி.

எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டான் சுவாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com