\
Vijay & MK stalin
Vijay & MK stalin web

’தவெகவிற்கு ஆதரவாக உண்மைக்கு மாறான கருத்துகள்..’ - ஸ்டாலின் அதிரடி பதிவு!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக பல உண்மைக்கு மாறான கருத்துகள் சமூகவலைதளங்களில் வலம்வருவதாக விளக்கும் வீடியோ பதிவொன்றை ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Published on
Summary

2026 சட்டமன்றத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளை மீறி தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் சமூக ஊடகங்கள், இன்ஸ்டாகிராம் மூலம் உழைப்பு இன்றி ஆட்சியைப் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தார். தற்போது தவெகவிற்கு ஆதரவாக உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுகின்றன எனக் கூறி, எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று வீடியோ ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவே வெல்லும் என கணித்திருந்தனர். ஆனால் பெரும்பாலனவர்களின் கருத்துக்கணிப்பிற்கு மாறாக விஜய் தலைமையிலான தவெக, திமுக மற்றும் அதிமுக இரண்டையும் ஓரங்கட்டி 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

CM Vijay
CM Vijay

இந்தசூழலில் தோல்விக்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின், ஒரு கட்சி எந்தவித உழைப்பையும் போடாமல், சமூக ஊடகங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமால் ஆட்சியைப் பிடித்துள்ளதாக விமர்சித்திருந்தார்.

mk stalin
mk stalinweb

இந்நிலையில் தற்போது தவெகவிற்கு ஆதரவாக உண்மைக்கு மாறான கருத்துகள் சமூகவலைதளத்தில் பரப்பப்படுவதாக வெளியான வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கும் ஸ்டாலின், "பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!" என பதிவிட்டுள்ளார். பகிர்ந்திருக்கும் வீடியோவில் தவெகவில் அதிக எண்ணிக்கையில் தலித் எம்எல்ஏக்கள் வென்றது, முதல் தலித் அமைச்சர் போன்று பரப்பப்பட்ட பல கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என விளக்கப்பட்டுள்ளது.

Vijay & MK stalin
​பெரும் சிக்கலில் செந்தில் பாலாஜி| என்ன செய்யப்போகிறது TVK அரசு.? அமலாக்கத்துறை கடிதத்தால் பரபரப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com