தமிழ்நாடு
மக்களை ஏமாற்ற நெடுவாசல் சென்றார் ஸ்டாலின் : தமிழிசை
மக்களை ஏமாற்ற நெடுவாசல் சென்றார் ஸ்டாலின் : தமிழிசை
ஆட்சியும், அதிகாரமும் தேவை என்றால் மட்டுமே, அதிமுகவின் இருதரப்பினருக்கும் ஜெயலலிதா நினைவுக்கு வருகிறார் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, நெடுவாசல் போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர், மு.க.ஸ்டாலின் சென்றது மக்களைச் ஏமாற்றும் செயல் என்றும், மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் வருவதற்கு ஸ்டாலினும், காங்கிரசஸ் அரசும்தான் காரணம் எனவும் தமிழிசை விமர்சித்துள்ளார்.