\
ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி: டிடிவி தினகரன்

ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி: டிடிவி தினகரன்

ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி: டிடிவி தினகரன்
Published on: 

அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க மு.க. ஸ்டாலின் தொடர்ந்து முயற்சித்து வருவதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்‌றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுகவின் தொண்டர்கள் விரும்பும் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தெரிவித்தார். அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தினகரன் குற்‌றம் சாட்டினார். திமுக எத்தனை போராட்டங்களை நடத்தினாலும், அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் தொடரும் என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com