அதிமுகவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கிறது - ஸ்டாலின்

அதிமுகவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கிறது - ஸ்டாலின்

அதிமுகவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கிறது - ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூரில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடத்துகிறது என்றும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுதான் மோடி அரசு மக்களுக்கு தரும் பரிசு எனவும் விமர்சித்தார்.

மேலும், “தொழிலாளர்களின் தோழனாகவும், பாட்டாளிகளின் பாதுகாவலானாகவும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இது இந்திய கம்யூனிஸ்ட் மாநாடாக இருந்தாலும் திமுக மாநாட்டில் கலந்துகொள்வது போன்றே, அதே உணர்வோடு உள்ளேன். வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, கொள்கை லட்சிய மாற்றத்திற்கான தேர்தல்.

அதிமுக மூலம் பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதரத்தை சிதைத்த மோடி ஔவையார் பாடலை கூறலாமா? பெட்ரோல் விலை உயர்வால் காய்கறி, போக்குவரத்து கட்டணம் என அனைத்து பொருட்களின் விலைவாசி உயரும். பெரியார், அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா, கலைஞரின் தமிழ்நாடு என்பது இது என்பதை நிரூபிக்க வேண்டும். உன்னத தலைவர்களால் உரம் போட்டு உருவாக்கப்பட்ட தமிழகத்தில் இழந்த உரிமையை மீட்க பாடுபட வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com