“யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” - ரஜினி வருகை குறித்து ஸ்டாலின்

“யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” - ரஜினி வருகை குறித்து ஸ்டாலின்
“யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” - ரஜினி வருகை குறித்து ஸ்டாலின்

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லோருக்கும் ஜனநாயகத்தில் இடம் உண்டு. கட்சி தொடங்கட்டும். கொள்கையை அறிவிக்கட்டும். அதன்பின்னர் நான் அதுப்பற்றி கருத்து கூறுகிறேன்.

திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என்று ரஜினி சொன்னதாக வெளியான தகவல் பற்றி எனக்கு எதுவும் வரவில்லை. ‘தமிழருவி மணியனை தப்பாக வச்சிக்கிட்டோமோ’ என்று ரஜினி சொன்னதாகத்தான் எனக்கு தகவல் வந்தது” எனத் தெரிவித்தார்.

மேலும், “வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும். மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு முறையாக வழங்கவில்லை. எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட சர்காரியா கமிஷனில் திமுக பற்றி ஏதாவது ஊழல் நிரூபிக்கப்பட்டதா? 2ஜி, ஸ்பெக்ட்ரம் பற்றி நிரூபிக்கப்பட்டுள்ளதா? ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது போட்ட வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆ.ராசா கூறியதுபோல் எடப்பாடி பழனிசாமி விவாதிக்க வேண்டும். ராஜேந்திர பாலாஜி ஒரு பஃபூன்” எனக் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com