தமிழ்நாடு
தேர்தல் ஆணையர் எடப்பாடி பழனிசாமியா? : மு.க ஸ்டாலின் கேள்வி
தேர்தல் ஆணையர் எடப்பாடி பழனிசாமியா? : மு.க ஸ்டாலின் கேள்வி
மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
இதுவரை ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில் தற்போது 2 கட்டமாக அறிவித்துள்ளனர். வார்டு மறுவரையறை பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்த கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. அதிமுகவுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமென்ற நோக்கில்தான் திமுக நீதிமன்றம் சென்றது.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 5 விசாரணை!