ஓபிஎஸ் வாசித்த 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் - ஸ்டாலின்

ஓபிஎஸ் வாசித்த 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் - ஸ்டாலின்
ஓபிஎஸ் வாசித்த 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் - ஸ்டாலின்

ஓ.பன்னீர்செல்வம் வாசித்த பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்த நிலையில் பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை 196 நிமிடங்கள் வாசித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “ஓ.பன்னீர்செல்வம் வாசித்த பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஒவ்வொருவர் தலையிலும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமையை தமிழக அரசு சுமத்தியுள்ளது. பட்ஜெட்டில் வளர்ச்சிப் பணிகள் இல்லை. தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.

மேலும், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, சபாநாயகர் முடிவு நல்லதாக கூட இருக்கலாம் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com