தமிழ்நாடு
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்
குட்கா ஊழல் விசாரணையை, லஞ்ச ஒழிப்பு துறையால் சுதந்திரமாக செய்ய முடியாது எனவும் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான டி.ஜி.பி ராஜேந்திரன் நியமனம் தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றம் சாட்டியுள்ளார். குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே தடை செய்யப்பட்ட குட்காவை விற்க, 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற உண்மை வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.