\
Stalin Says ‘Prison Break’ Begins in Tamil Nadu
ஸ்டாலின்ANI

17 கைதிகள் தப்பியோட்டம்; தமிழ்நாட்டில் Prison Break தொடங்கி விட்டது - மு.க. ஸ்டாலின்

Breaking Bad உடன் தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on: 

சென்னை புழல் சிறையில் இருந்து கடந்த 20 மற்றும் 21-ம் தேதிகளில், நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 2 கைதிகள் தப்பியோடினர். எனினும், அக்டோபர் 22-ம் தேதி தப்பியோடிய 2 பேரையும் காவல்துறை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட  புழல் தண்​டனை சிறை தலைமை வார்​டன் உட்பட பல அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தை பரபரப்பை ஏற்படுத்திய இந்தச்சம்பவம் ஓய்வதற்குள் தேனி, தேக்கம்பட்டி மாவட்டச் சிறைச்சாலையில் நேற்று இரவு 17 கைதிகள் சினிமா பாணியில் காவலர்களைத் தாக்கித் தப்பிச் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தில், சிறைத்துறை பணியாளர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கைதிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 5 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், தப்பிய மீதி குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தச்சூழலில் தான், தமிழ்நாட்டில் Breaking Bad உடன் Prison Break-உம் தொடங்கிவிட்டது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Stalin Says ‘Prison Break’ Begins in Tamil Nadu
AI ஆல் வேலை பறிபோகாது? சமூகத்தில் ஏஐ தாக்கம் என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட்ட சென்னை ஐஐடி!!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் தவெக அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது” எனத் தெரிவித்துள்ளது.

Stalin Says ‘Prison Break’ Begins in Tamil Nadu
Party Fund File எங்கே எனக் கேட்டனர்; ஒரு File திறந்ததற்கே - அமைச்சர் நிர்மல்குமார்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com