\
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்

வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்

வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
Published on: 

வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஏராளமான கோரிக்கை மனுக்களை பெற்று பிரத்யேக பெட்டியில் வைத்து சீலிட்டார். முன்னதாக பேசிய அவர், அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்ற பழமொழியை குறிப்பிட்டு, ஆட்சி முடியும் நேரத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிடுவதாக குறிப்பிட்டார். வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடு வெறும் அறிவிப்பு மட்டுமே எனக்கூறிய ஸ்டாலின், வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும் எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com