கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த மு.க.ஸ்டாலினுக்கு பதில் அப்பொறுப்பில் மு.பெ.சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக இளைஞரணி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இதனிடையே கடந்த 4-ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக மு.பெ.சாமிநாதன் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டாலின் செயல் தலைவராக தேர்வானதால் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து மு.பெ.சாமிநாதன் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.இளைஞரணி இணைச் செயலாளராக சுபா.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.