\
Stalin Questions Vijay: Can Reels Feed People?
மு.க. ஸ்டாலின்Pt web

ரீல்ஸ் பார்த்தால் வயிறு நிறையுமா? - முதல்வரிடம் மு.க. ஸ்டாலின் கேள்வி!!

ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? என முதல்வர் விஜயிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: 

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரைகள் களைக்கட்டி வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் தாராபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் விஜய் இன்று மதுராந்தகத்தில் சாலைவலம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்தச்சூழலில் தான், விலைவாசி உயர்வு குறித்து தமிழக அரசை மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா? தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.

ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் - விஜய்Pt web

அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.

”வெற்றி” என ஸ்டிக்கர்

இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன. பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் 'வெற்றி' என Sticker ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stalin Questions Vijay: Can Reels Feed People?
மாநில நெடுஞ்சாலை பலகையில் இந்தி! இரவோடு இரவாக மறைக்கப்பட்ட எழுத்துகள்!அதிகாரிகள் பணிநீக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com