\
ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? - ஸ்டாலின் கேள்வி

ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? - ஸ்டாலின் கேள்வி

ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? - ஸ்டாலின் கேள்வி
Published on

ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சரிதா. இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் சாதிய தீண்டாமையுடன் நடத்துவதாகவும் கடந்த 21ஆம் தேதி சரிதா புகார் அளித்திருந்தார்.

அவரின் புகாரின் பேரில் சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் நெகமம் காவல்துறையினர் பாலசுப்ரமணியம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “கோவை மாவட்டம் ஜே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதிரீதியாக அவமானப்படுத்தப்பட்டும், கொலை மிரட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார். தன்னை அவமானப்படுத்துபவர்கள் யார் என்று குறிப்பிட்டே கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார். ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு சட்டப்பாதுகாப்பு தர வேண்டும். அவரை மிரட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com