சால்வைக்கு பதில் புத்தகங்கள் வழங்கிடுங்கள்... ஸ்டாலின் வேண்டுகோள்

சால்வைக்கு பதில் புத்தகங்கள் வழங்கிடுங்கள்... ஸ்டாலின் வேண்டுகோள்

சால்வைக்கு பதில் புத்தகங்கள் வழங்கிடுங்கள்... ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

விழா நாட்களிலும், மேடைகளிலும் சால்வை அணிவிப்பதை தவிர்த்து புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என தொண்டர்களுக்கு திமுக‌ செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், தோளில் துண்டு அணியும் வழக்கம் குறைந்துவிட்ட நிலையில் விழா நாட்களிலும், மேடைகளிலும் சால்வை என்ற பெயரில் பயனற்ற துணியை அணிவிப்பது பொருளற்ற செயலாக அமைந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். பகட்டான இந்த பழக்கத்தை தவிர்த்து காலமெல்லாம் பயனுள்ள வகையில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்து பின்பற்றுவோம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தன்னுடைய பிறந்தநாளில் நேரில் சந்தித்து அன்பை வெளிப்படுத்த நினைக்கும் திமுகவினர் சால்வை அணிவிக்காம‌ல் புத்தகங்களை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதன் மூலம் அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, மிகுதியாக சேரும் புத்தகங்களை தமிழகத்தின் பல்வேறு நூலகங்களுக்கும் கொடுப்பதன் மூலம் மக்கள் பயன்பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து மக்கள் நலன் சார்ந்த விழாக்கள், திமுகவின் கொள்கையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com