கீழடி ஆய்வுக்கு நிதி மறுப்பு அதிர்ச்சியளிக்கிறது: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

கீழடி ஆய்வுக்கு நிதி மறுப்பு அதிர்ச்சியளிக்கிறது: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
கீழடி ஆய்வுக்கு நிதி மறுப்பு அதிர்ச்சியளிக்கிறது: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கீழடி அகழ்வாராய்ச்சி பணியை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மதுரை - சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் 2‌‌,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நாகரிகத்தின் பழமையான மற்றும் குறிப்பிடத்தகுந்த இடம் கீழடி என்றும் அங்கு அகழ்வாராய்ச்சி பணி நிறுத்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பண்டைய நாகரிகத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்வதற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்திய மத்திய தொல்லியல் துறை வாரியத்தின் செயல் ஒருதலைபட்சமான, நியாயமற்ற நடவடிக்கை என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் மகேஷ் ஷர்மா தலையிட்டு கீழடி அகழ்வாராய்ச்‌‌சி பணியை தொடர்ந்து நடத்தவும், அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com