கடந்த 6 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து புதுவண்ணாரப்பேட்டையில் திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய ஸ்டாலின், ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா மற்றும் இதர முறைகேடுகளில் ஈடுபட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஒன்றும் உத்தமர் இல்லை என்றும் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த காலத்தில் ஊழல் வசூலை ஒய்யாரமாக செய்தவர் தான் எனவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்கு காரணமான தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.