முதல்வர் ஸ்டாலின், ராஜ் பவன்
முதல்வர் ஸ்டாலின், ராஜ் பவன்pt web

ராஜ்பவன் to லோக்பவன் | ”பெயர் மாற்றத்தை விட சிந்தனை மாற்றமே அவசியம்” - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.!

மாநில ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை ”ராஜ்பவன்” என்பதிலிருந்து ”லோக் பவன்” எனப் பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், பெயர் மாற்றத்தை விட சிந்தனை மாற்றமே தேவை என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Published on

ராஆளுநர் மாளிகையான ராஜ் பவனின் பெயரை லோக் பவன் என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ராஜ் பவன் என்ற பெயரை லோக் பவன் என்றும், ஆளுநர் இல்லங்களுக்கு வழங்கி வந்த ராஜ் நிவாஸ் என்ற பெயரை லோக் நிவாஸ் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ராஜ் பவன் என்ற பெயரை லோக் பவன் என பெயர் மாற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கை வைத்திருந்ததாகவும் அதனை ஏற்று மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் ஆர்.என்.ரவி-யின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை.

”சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ராஜ் பவன்
"2000 வருடங்களாக Social Distancing, சாதி என்ற வைரஸ்!" - Martin Scorseseக்கு சாதியை விளக்கிய நீரஜ்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com