மீண்டும் ஆட்சியை பிடிக்கும் மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மீண்டும் ஆட்சியை பிடிக்கும் மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மீண்டும் ஆட்சியை பிடிக்கும் மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்து அதிகாரி அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிடட்டும் என சுவேந்து அதிகாரி சவால் விடுத்தார். இதனால் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விடுத்து நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டார் மம்தா.

இந்நிலையில்தான் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியை தோற்கடித்துள்ளார். மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி 213 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜக 78 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

அதேபோல் கேரளாவை பொறுத்தவரை, சிபிஎம் 95 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 41 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

I congratulate @MamataOfficial on her re-election as Chief Minister of West Bengal.

At a time of COVID-19 wave, I have no doubt that Didi will ensure safety of citizens and lead her state to growth and prosperity.

On behalf of DMK, I wish Didi another successful tenure.
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021

தமிழகத்தை பொறுத்தவரை, 157 இடங்களில் திமுக கூட்டணியும் 77 இடங்களில் அதிமுக கூட்டணியும் முன்னிலையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com