அண்ணா சிலை தடுப்பு வேலியில் காவிக்கொடி - குற்றவாளிகளை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

அண்ணா சிலை தடுப்பு வேலியில் காவிக்கொடி - குற்றவாளிகளை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
அண்ணா சிலை தடுப்பு வேலியில் காவிக்கொடி - குற்றவாளிகளை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

கன்னியாகுமரி அருகே அண்ணா சிலை தடுப்பு வேலியில் காவிக்கொடி கட்டப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலையின் தடுப்பு வேலியில் மர்ம நபர்கள் காவிக்கொடி கட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து பத்மனாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

தகவலறிந்து வந்த களியக்காவிளை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றியதும், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததும் பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த அலை ஓய்வதற்குள் அடுத்து இந்த பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம்! தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com