அண்ணா பல்கலையில் தத்துவப்படிப்பு - ஸ்டாலின் கண்டனம்

அண்ணா பல்கலையில் தத்துவப்படிப்பு - ஸ்டாலின் கண்டனம்

அண்ணா பல்கலையில் தத்துவப்படிப்பு - ஸ்டாலின் கண்டனம்
Published on

அண்ணா பல்கலை பாடத் திட்டத்தில் சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பதிவில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், "இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு" என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது!

கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com