\
ஆளுநரிடம் புகார் அளித்தார் ஸ்டாலின்

ஆளுநரிடம் புகார் அளித்தார் ஸ்டாலின்

ஆளுநரிடம் புகார் அளித்தார் ஸ்டாலின்
Published on

சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் அளித்தார்.

ரகசிய வாக்கெடுப்பு கோரி அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். திமுக எம்எல்ஏக்கள் தனது சட்டையைக் கிழித்து விட்டதாக சபாநாயகர் தனபால் குற்றம்சாட்டினர்.ஆனால், அவைக்காவலர்களை ஏவி தன்னை தாக்கியதாக ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் பேரவை வளாகத்தில் குற்றம்சாட்டினார். சபாநாயகர் தனபால் சட்டையை அவரே கிழித்துக் கொண்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com