''எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?'' - மு.க.ஸ்டாலின்

''எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?'' - மு.க.ஸ்டாலின்

''எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?'' - மு.க.ஸ்டாலின்
Published on

''எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?'' என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “கடன் தள்ளுபடிக்காக என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பதால் நியாயமான கோரிக்கைக்காக போராடிய இளங்கீரனை, அராஜகமாக கைது செய்திருக்கிறது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காவல்துறை! எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?
அதிகார வெறியால் தோற்கப் போவது விவசாயிகள் அல்ல! பழனிசாமிதான்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி-சிதம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு பல்வேறு கிராமப் பகுதிகளில் இடங்களைத் தேர்வுசெய்து, பொக்லைன் இயந்திரம்கொண்டு இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இயந்திரங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன், போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com