”கலைஞரின் திட்டங்களை நிறுத்தியதால்தான், நீங்கள் ஆட்சியையே இழந்தீர்கள்”- பேரவையில் முதல்வர்

”கலைஞரின் திட்டங்களை நிறுத்தியதால்தான், நீங்கள் ஆட்சியையே இழந்தீர்கள்”- பேரவையில் முதல்வர்

”கலைஞரின் திட்டங்களை நிறுத்தியதால்தான், நீங்கள் ஆட்சியையே இழந்தீர்கள்”- பேரவையில் முதல்வர்
Published on

இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது, அம்மா உணவகத்தில் பணியாளர்களை குறைப்பது குறித்து அதிமுக – திமுகவினரிடையே காரசார விவாதம் நடந்தது. அப்போது ஒருகட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் “கடந்த காலங்களில் கலைஞர் பெயரில் தொடங்கப்பட்ட திட்டங்களை நிறுத்தியதால் தான் அதிமுக ஆட்சியை இழந்து இருக்கிறது” எனக்கூறி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.

 இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா இருசக்கர வாகன மானியம் கிடைக்காமல் இருப்போர், அம்மா உணவகத்தில் நடக்க்கும் பணியாளர்கள் குறைப்பு, அம்மா மினி கிளினிக் மூடல் உள்ளிட்ட பல விஷயங்களை பேரவையின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

அந்தவகையில் எடப்பாடி பழனிச்சாமி, “கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சர். அம்மா இரு சக்கர வாகனம் வாங்கியவர்களுக்கு இன்னமும் மானியம் போய் சேரவில்லை அதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்ய வேண்டும். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. இது கண்டனத்துக்குரியது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன்,  “அம்மா உணவத்தை மூடினால்தான் என்ன..? நீங்கள் கலைஞர் பெயரிலான எத்தனை திட்டங்களை மூடினீர்கள்?” என்று காட்டமாக பதிலளித்து, அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட திட்டங்களை ஆவேசமாக பட்டியலிட்டார். அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர், “அம்மா உணவகத்தை மூடினால், அதற்கான பாவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்” என்றார் காட்டமாக.

இந்த பதிலைக் கேட்டவுடன்  குறுக்கிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை மூடியதால் தான் நீங்கள் ஆட்சியை இழந்தீர்கள்” என்றார் காட்டமாக.

இதேபோல பேரவையில் பல விஷயங்கள் குறித்து காரசார விவாதங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com