\
சாலையோர கடையில் டீ குடித்த ஸ்டாலின்

சாலையோர கடையில் டீ குடித்த ஸ்டாலின்

சாலையோர கடையில் டீ குடித்த ஸ்டாலின்
Published on

திருவாரூர் சென்றுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று, நகர பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு, சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

பூண்டி கலைவாணர் இல்லத்திருமண விழாவில் கலந்துக்கொள்வதற்காக நேற்று மாலை மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றார். அங்கு 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம், மருத்துவமனைக் கட்டடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட அவர் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார். பின்னர், திருவாரூர் நகர மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஆயிரம் ஆண்டு பழமையான கல்தேரையும் ஸ்டாலின் பார்வையிட்டார். அவருடன், முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ், திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com