தமிழ்நாடு
செங்கல்பட்டு: தேக்கமடைந்த நெல்மூட்டைகள் - விவசாயிகள் கலக்கம்
செங்கல்பட்டு: தேக்கமடைந்த நெல்மூட்டைகள் - விவசாயிகள் கலக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் 5,000 நெல்மூட்டைகள் தேக்கமடையும் நிலை உருவாகியுள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளுடன் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருந்தனர். திடீரென அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை மூடியதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். மழை பெய்தால் ஒரு போக உழைப்பே வீணாகிவிடும் என்பதால், விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.