தமிழ்நாடு
மூத்த தமிழறிஞர் 'சொல்லின் செல்வர்' சோ.சத்தியசீலன் காலமானார்
மூத்த தமிழறிஞர் 'சொல்லின் செல்வர்' சோ.சத்தியசீலன் காலமானார்
மூத்த தமிழறிஞரும் தமிழ்நாட்டின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமான சோ.சத்தியசீலன் திருச்சியில் உடல்நலக் குறைவால் காலமானார்.
88 வயதான சத்தியசீலன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இலக்கியத் திறனுக்காக கலைமாமணி, சொல்லின் செல்வர் விருதுகளை சோ.சத்தியசீலன் பெற்றுள்ளார்.
குன்றக்குடி அடிகளாரால் நாவுக்கரசர் என்ற பட்டமும் பெற்றவர். பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஆகிய பதவிகளையும் சோ.சத்தியசீலன் வகித்துள்ளார்.