\
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!!
Published on

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்

மார்ச் 27ம் தேதியில் இருந்து 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள், கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com