\
எஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் பலி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்!

எஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் பலி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்!

எஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் பலி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்!
Published on

சென்னையில் இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதிய விபத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் உயிரிழந்தார். மகள் மரணத் தில் சந்தேகம் இருப்பதாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் புகார் அளித்துள்ளார்.

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.எஸ்.ஐ ஆக பணிபுரிபவர் துளசிங்கம். இவர் மகள் ரம்யா. இவர் பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலை முடிந்து, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந் தார்.   வால்டாக்ஸ் சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மினி வேன், ரம்யா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரம்யா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மினிவேன் ஓட்டுநர் பழனியை கைது செய்தனர். 

இந்த நிலையில் ரம்யா உயிரிழப்புக்கு, தனது மாமனார் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ரத்தினம் தான் காரணம் என்று துளசிங்கம் புகார் அளித்துள் ளார். குடும்பத்தகராறு காரணமாக ரத்தினம் மற்றும் அவரது மகன் எத்திராஜ் ஆகியோர் ரம்யாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகப் படுவதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுபற்றி யானைக்கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com