நிவேதிதா லூயிஸ் To சிற்பி.பாலசுப்பிரமணியம்: தமிழ்ப் பேராய விருது 2022 பெற்றவர்களின் விபரம்

நிவேதிதா லூயிஸ் To சிற்பி.பாலசுப்பிரமணியம்: தமிழ்ப் பேராய விருது 2022 பெற்றவர்களின் விபரம்
நிவேதிதா லூயிஸ் To சிற்பி.பாலசுப்பிரமணியம்: தமிழ்ப் பேராய விருது 2022 பெற்றவர்களின் விபரம்

2022-ம் ஆண்டுக்கான தமிழ் பேராய விருதுகளை எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனரும், தமிழ் பேராய புரவலருமான டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர் வழங்கினர்.

சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் தமிழ் பேராய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ் பேராய விருதுகளை டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. மற்றும் காந்திய நெறியாளர் தமிழருவி மணியன் ஆகியோர் இணைந்து வெற்றிபெற்ற விருத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

சுதேசமித்ரன் தமிழ் இதழ் விருது, தொல்காப்பியர் தமிழ் சங்கம் விருது ஆகிய விருதுகளுக்கு தலா 50 ஆயிரமும், பாரிவேந்தர் பைந்தமிழ் விருதுக்கு மூன்று லட்சமும், விருதுகளுக்கு தலா ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.

தமிழ்ப்பேராய விருது பெற்றவர்களின் பட்டியல்

1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
*வடசென்னை - நிவேதிதா லூயிஸ்

2. பாரதியார் கவிதை விருது 
*வேட்டுவம் நூறு - மெளனன் யாத்ரிகா

3. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது

* உதைப்பந்து - ஏ.ஆர்.முருகேசன்
* மலைப்பூ - விழியன்

4. ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது
*யாதும் ஊரே - சித்தார்த்தன்

5. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது
*தமிழர் மருத்துவம் - பால .சிவகடாட்சம்

6. பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது
*கவிதை மரபும் தொல்காப்பியமும் - இராம குருநாதன்

7. முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது
*தமிழர் சுற்று வட்டார பாதையில் தந்தை பெரியார் - கரூவூர் கன்னல்

*உலக தலைவர் அண்ணல் அம்பேத்கர் - குடந்தை பாலு

8. சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது
*மணல் வீடு - மு. அரி கிருஷ்ணன்

9. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது
*வி. முத்து, தலைவர் - புதுவை தமிழ் சங்கம்

10.பாரிவேந்தர் பைந்தமிழ் விருது
*சிற்பி. பாலசுப்பிரமணியம்

தமிழ்ப்பேராய விருதுகள் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் ஒவ்வோர் ஆண்டும் 12 தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் 2 கோடியே 20 இலட்சம் அளவிலான பரிசுத் தொகை இதற்காக வழங்கப்பட்டுள்ளது. 89 படைப்பாளர்கள் விருது பெற்றுள்ளனர். அவர்களில் அமெரிக்கா, கனடா, இலங்கை, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் படைப்பாளர்களும் அடங்குவர். தமிழ்ப்பேராய விருதுகள் உரிய தகுதிவாய்ந்தோர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் தமிழ்ப்பேராய விருதாளர்கள், அதன்பிறகு சாகித்திய அகாடெமி விருதுகளையும், செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகளையும் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகளையும் பெற்றுள்ளனர்.

தமிழ் பேராய விருதுகள் பாரபட்சமற்ற முறையில் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் தமிழ் தமிழார்ந்த அறிஞர்கள் அவர்கள் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நீதிபதியை வைத்து விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அளிக்கக்கூடிய விருத்தாளர்கள் பெயர்களை நாங்கள் அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com