\
எஸ்.ஆர்.எம். பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பங்கேற்பு

எஸ்.ஆர்.எம். பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பங்கேற்பு

எஸ்.ஆர்.எம். பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பங்கேற்பு
Published on

இன்று காலை சென்னை வந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று காலை சென்னை வந்தார். அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர்கள் ஜெயக்குமார், பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சால்வை அணித்து வரவேற்றனர். பின்பு சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

இவருடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், எஸ்ஆர்எம் கல்வி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோரும் உடனிருந்தனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com