சித்திரை தேரோட்டம்
சித்திரை தேரோட்டம்pt desk

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டம் - கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள கலந்து கொண்டு, கோவிந்தா ,கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: வி.சார்லஸ்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்;தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து ஏழாம் நாளான கடந்த 24ம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார்.

அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த அவர், தயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சம் கண்டருளிய அவர், மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார். எட்டாம் நாளான நேற்று (25.04.2025) அவர் தங்ககுதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், ஒன்பதாம் நாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளி மாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்;பெருமாள் மேஷ லக்கனபடி அதிகாலை 5.15 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார்.

சித்திரை தேரோட்டம்
மஹாராஷ்டிரா| தண்ணீருக்காக பல கிலோ மீட்டருக்கு படையெடுக்கும் மக்கள்!

காலை 6.30. மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் திருதேரின் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு முக்கிய வீதிகளை திருத்தேர் வலம் வந்தது. ரெங்கா ரெங்கா என்று தரிசித்த பக்தர்களுக்கு திருத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் தரிசனம் கொடுத்தார். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com