ஆன்மீக தரிசனத்துக்கு கப்பல் போக்குவரத்து: இலங்கை தமிழர்கள் கோரிக்கை

ஆன்மீக தரிசனத்துக்கு கப்பல் போக்குவரத்து: இலங்கை தமிழர்கள் கோரிக்கை

ஆன்மீக தரிசனத்துக்கு கப்பல் போக்குவரத்து: இலங்கை தமிழர்கள் கோரிக்கை
Published on

தமிழகத்திற்கு ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள குறைந்த கட்டணத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என கடலூர் பாடலிஸ்வரர் கோயிலுக்கு வந்த இலங்கை வாழ் தமிழர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கையில் வவுனியா பகுதியில் வசிக்கும் தமிழகர்கள் 4 பேர் உள்பட 38 இலங்கை தமிழர்கள் கடலூர் பாடலீஸ்வரர் ஆலையத்தில் சாமி தாரிசனம் செய்தனர். பல ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஆன்மிக யாத்திரைக்கு வருவதாகவும், இதற்காக கப்பல் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க இரு நாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு தரிசனம் செய்த பின் இறுதியாக வரு‌‌ம் 19ஆம் தேதி ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல‌‌ இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com