\
கச்சத்தீவில் இலங்கை ரோந்து கப்பல்: மீனவர்கள் வேதனை!

கச்சத்தீவில் இலங்கை ரோந்து கப்பல்: மீனவர்கள் வேதனை!

கச்சத்தீவில் இலங்கை ரோந்து கப்பல்: மீனவர்கள் வேதனை!
Published on: 

கச்சத்தீவு அருகே 10க்கும் மேற்பட்ட இலங்கை ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினர். நேற்றுமாலை ராமேஸ்வரத்தில் இருந்து 600-க்கும் அதிகமான படகுகளில் 5ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது, கச்சத்தீவு அருகே இலங்கை ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டதால், மீனவர்கள் அருகில் செல்லாமல் காத்திருந்தனர். இரவு முழுவதும் ரோந்து கப்பல்கள் அங்கேயே இருந்ததால் அச்சமடைந்த மீனவர்கள் விரக்தியுடன் கரை திரும்பினர். 
கடலுக்குச்சென்று மீன்பிடிக்காமல் கரைக்கு வந்ததால் படகு ஒன்றுக்கு 50ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com