\
நாகை மீனவர்கள் 10 பேர் கைது

நாகை மீனவர்கள் 10 பேர் கைது

நாகை மீனவர்கள் 10 பேர் கைது
Published on

நாகையைச் சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட 10 மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து, தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் கைது நடவடிக்கைகள் தொடர்வதால், மத்திய,மாநில அரசுகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 109 மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று 10 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com