\
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கைது

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கைது

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கைது
Published on

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல் பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் படகுகளுடன் மீனவர்கள் கைது செய்யப்படுவதால் அவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com