\
குப்பை தொட்டியில் இலங்கை கரன்சி: போலீசார் அதிர்ச்சி

குப்பை தொட்டியில் இலங்கை கரன்சி: போலீசார் அதிர்ச்சி

குப்பை தொட்டியில் இலங்கை கரன்சி: போலீசார் அதிர்ச்சி
Published on

சென்னை பெசன்ட் நகர் சாஸ்திரிநகர் போலீஸ் பூத் அருகே குப்பை தொட்டியிலிருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலங்கை பணம் கண்டெடுக்கப்பட்டது.

குப்பைத் தொட்டியை சுத்தம் செய்ய வந்த ஒப்பந்த பணியாளர் உமா என்பவர், அந்த பணத்தை சாஸ்திரி ‌நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். இந்த பணம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் எவ்வாறு குப்பை தொட்டிக்கு வந்தது என்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com