\
தமிழக மீனவர்களுக்கு 22ம் தேதி வரை காவல் நீட்டிப்பு - இலங்கை நீதிமன்றம்

தமிழக மீனவர்களுக்கு 22ம் தேதி வரை காவல் நீட்டிப்பு - இலங்கை நீதிமன்றம்

தமிழக மீனவர்களுக்கு 22ம் தேதி வரை காவல் நீட்டிப்பு - இலங்கை நீதிமன்றம்
Published on

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 49 தமிழக மீனவர்களை வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நெடுந்தீவு, காரைநகருக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 49 பேரை எல்லைத்தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 12 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது, கடலில் தவறி விழுந்த இலங்கை கடற்படை வீரரை மீட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சமீபத்தில் நல்லெண்ண அடிப்படையில் 77 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்த நிலையில், நேற்று ஒரே நாளில் 49 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 49 மீனவர்களையும் வரும் 22ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com