தமிழர்கள் இடத்தை திரும்பக் கொடுங்கள் - ராணுவத்துக்கு இலங்கை அதிபர் உத்தரவு
இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான இடத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் இடையேயான போர் கடந்த 2009ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால் அப்போது ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள், இதுவரையிலும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழர்களின் நிலங்களை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் சிறிசேனவின் தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், அவ்வப்போது தமிழர்களின் நிலங்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் கூட, யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த 190 தமிழ்க் குடும்பங்களுக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலம் திருப்பி வழங்கப்பட்டது. அந்த வகையில் தான், தற்போது இந்த மாத இறுதிக்குள் தமிழர்களின் நிலங்களை திருப்பி ஒப்படைக்க சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.