இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் தமிழ்நாட்டிற்கு வந்திறங்கிய இலங்கைப் பெண்

இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் தமிழ்நாட்டிற்கு வந்திறங்கிய இலங்கைப் பெண்

இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் தமிழ்நாட்டிற்கு வந்திறங்கிய இலங்கைப் பெண்
Published on

இலங்கையில் இருந்து அகதிகளாக கணவரால் கைவிடப்பட்ட பெண்ணொருவர் தனது 2 குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். ஆபத்தான முறையில் மூவரும் படகு மூலம் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு என உயர்ந்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது இலங்கை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பசியும் பட்டினியுமாக வாழ வழியின்றி இலங்கையிலிருந்து அகதிகளாக ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்கு வருவது தொடர்கதையாகி வருகிறது.

அப்படி ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் வந்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உரிய விசாரணைக்கு பின் அனைவரும் மண்டப அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இன்று யாழ்ப்பாணம் மாவட்டம் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்ணொருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் இரண்டு லட்ச ரூபாய் படகிற்கு கொடுத்து தனுஷ்கோடி கம்பிபாடு பகுதிக்கு வந்து இறங்கி உள்ளனர்.

இவர்கள் வந்திருக்கும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடற்படை காவல்துறை மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக தனுஷ்கோடி மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர். அங்கிருந்து பின்னர் முறையான விசாரணைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com