கடல் வழியாக கடத்த முயன்ற 11.3 கிலோ தங்கம் பறிமுதல் - 3 பேர் கைது
செய்தியாளர்: அ.ஆனந்தன்
தமிழகம் அருகே இலங்கை இருப்பதால் கடல் வழியாக தங்கம், போதைப்பொருட்கள், பீடிஇலை, பலசரக்கு உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகமாக நடந்து வருகிறது. கடத்தல் குறித்து இந்திய, இலங்கை கப்பற்படையினர் தொடர்ந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினருக்கு தமிழகத்திற்கு தங்கம் கடத்திச் செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து; புத்தளம் மாவட்டம் கல்பிட்டியிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்தவிருந்த 11 கிலோ 300 கிராம் தங்கத்தினை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கல்பிட்டியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் இலங்கை சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்தியாவில் ரூ.9 கோடி ரூபாய்