நாகை மீனவர்களின் வலைகள், மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்களின் வலைகள், மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்களின் வலைகள், மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நாகூரைச் சேர்ந்த செல்வகுமார், ரவி, மூர்த்தி ஆகியோர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே பைபர் படகில் மீன்பிடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 4 கடற்கொள்ளையர்கள், மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த மீன் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ வலைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடலில் இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதாகவும், அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com