எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மூன்று விசைப் படகுகளுடன் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

செய்தியாளர்: அ.ஆனந்தன்

தமிழக மீனவர்கள், இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மூன்று விசைப் படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

Boat
Boatpt desk

இதையடுத்து கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட விசைப் படகுகளில், இரண்டு படகு ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தது எனவும், மற்றொன்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com