\
இலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பும் 77 தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பும் 77 தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பும் 77 தமிழக மீனவர்கள்
Published on

இலங்கைச் சி‌றையில் இருந்த 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் ‌நாகை பகுதிகளைச் சேர்ந்த 92 மீனவர்கள், கடந்த 3 மாதங்களாக இலங்கைச் சிறையில் உள்ளனர். அவர்களில் 77 மீனவர்களை இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட மீனவர்களை இன்று காலை 10 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினர், இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்க உள்ளனர். அந்த மீனவர்கள் அனைவரும் காரைக்கால் துறைமுகத்திற்கு இன்று மாலை அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைச் சிறையில் உள்ள மேலும் 15 தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com