தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடத் தொடங்கிய இலங்கை

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடத் தொடங்கிய இலங்கை

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடத் தொடங்கிய இலங்கை
Published on

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடத் தொடங்கியுள்ளது.

எல்லைத் தாண்டி மீன்பிடித்தததாக கூறி தமிழக மீனவர்களிடமிருந்து 105 நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, 5 நாட்கள் ஏலத்தை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. முதல் நாளாக தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 65 படகுகளை ஏலம் விடும் பணி காரைநகர் துறைமுகத்தில் தொடங்கியுள்ளது.

படகுகள் ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்த தமிழக மீனவர்களுக்கு, இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பெருத்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com